×

சென்னை பார்முலா 4 ரேசிங் அட்டவணை வெளியீடு

சென்னை: சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. பார்முலா 4 கார் பந்தயம் குறித்த அட்டவணை மற்றும் விதிமுறைகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது.

இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு பார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட் தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.

பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை, மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும், அவை திரும்பத் தரப்படமாட்டது.

* கூர்மையான பொருட்கள் – பிளேடுகள், கத்திகள், கத்திரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை.
* ஆயுதங்கள் – துப்பாக்கிகள் , கத்திகள், சுவிஸ் ராணுவ கத்திகள் போன்றவை
* லேசர்ஸ்-லேசர் லைட்டுகள்
* விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் – வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர.
* ஒலி அமைப்புகள் – ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாஃபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்.

தடைசெய்யப்பட்ட பொருட்களின் விவரம்
* தீப்பற்றக்கூடிய பொருட்கள் – தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை பார்முலா 4 ரேசிங் அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai Formula 4 ,Chennai ,Chennai Formula 4 Racing Circuit ,Indian Racing League ,4 ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை ஃபார்முலா -4 கார் பந்தயப்...