×

முன்ஜாமீன் கோரி சந்திரபாபுநாயுடு தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 2014-2019 வரை முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டு கழகத்தில் பல நூறு கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்து, போலி நிறுவனங்களை உருவாக்கி அதில் நிதி முதலீடு செய்து பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆந்திர சிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபுநாயுடுதற்போது ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவ்வழக்கு அரசியல் பழிவாங்கும் வகையில் தொடரப்பட்ட பொய் வழக்கு.

ஆகையால், இவ்வழக்கை ரத்து செய்ய கூறி உச்சநீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தலைநகர் அமராவதி உள்வட்ட சாலை சீரமைப்பு மாற்றத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் செய்ததாக சந்திரபாபுபாபுவுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டம் புங்கனூர் தொகுதியில் அங்கல்லுவில் போலீசாரை தாக்கி காயப்படுத்தி வாகனங்களை எரித்ததாக ஏற்கனவே போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், அவர் ஆட்சியில் இருந்தபோது பைபர் கிரிட் முறைகேடு வழக்கில் பல கோடி ரூபாய் ஊழல் செய்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை ஆந்திர உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. எனவே, திறன் மேம்பாட்டு கழக ஊழலில் சந்திரபாபு ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், இந்த 3 வழக்குகளில் ஏதாவது ஒன்றில் அவரை மீண்டும் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.  இதனையடுத்து, சந்திரபாபு தரப்பில் 3 வழக்குகளில் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளனர்.

The post முன்ஜாமீன் கோரி சந்திரபாபுநாயுடு தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Court ,Tirumala ,Andhra ,Chief Minister ,Skill Development Corporation ,
× RELATED திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு