×

செல்போனை கொண்டு வந்தது யார் என்பதை கண்டுபிடிக்க மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை மபி பள்ளி ஆசிரியர் மீது போலீஸ் வழக்கு பதிவு

இந்தூர்: மத்திய பிரதேசம்,இந்தூரில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கடந்த 2ம் தேதி ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது வகுப்பறையில் செல் போன் ஒலித்து கொண்டிருந்தது. அப்போது ஆசிரியர் மாணவிகளிடம் கேட்க யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 5 மாணவிகளை பாத்ரூமுக்கு ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார். இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

மல்ஹர்கஞ்ச் இன்ஸ்பெக்டர் ஷிவ்குமார் கூறுகையில், ‘‘ செல் போனை கொண்டு வந்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக ஆடைகளை களைய சொல்லி மாணவிகளுக்கு ஆசிரியர் மனரீதியான தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பாலியல் ரீதியான நோக்கத்தில் இதை செய்யவில்லை என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை’’ என்றார்.

The post செல்போனை கொண்டு வந்தது யார் என்பதை கண்டுபிடிக்க மாணவிகளின் ஆடைகளை களைந்து சோதனை மபி பள்ளி ஆசிரியர் மீது போலீஸ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Indore ,Government Girls High School ,Indore, Madhya Pradesh ,
× RELATED பள்ளியில் மகளிடம் தகராறு செய்த...