×

செல்போனில் தொடர்புகொண்டு மசாஜ் செய்ய அழைத்து பாஜ பெண் பிரமுகருக்கு தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி, நீலாங்கரை போலீசார் விசாரணை

திருப்போரூர்: பாஜ பெண் பிரமுகரை செல்போனில் தொடர்புகொண்டு மசாஜ் செய்ய அழைத்து தொல்லை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் அலிஷா அப்துல்லா. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். இவர். சமூக வலைத்தளங்களில் பாஜவுக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார். சென்னை நீலாங்கரை மற்றும் தி.நகர் பகுதிகளில் ஸ்கின் கேர் கிளினிக் நடத்தி வருகிறார்.

இவரது, அலைபேசிக்கு நேற்று தொடர்ச்சியான அழைப்புகள் வந்தன. இதையடுத்து அலிஷா அந்த அலைபேசியில் பேசிய நபரிடம் பேசிய போதுதான் ஓ.எம்.ஆர். சாலையில் நாவலூர் அருகே ஏகாட்டூரில் உள்ள ஜிஞ்சர் என்ற ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், ஆன்லைனில் மசாஜ் சர்வீஸ் குறித்து தேடியபோது உங்களின் பெயர் மற்றும் முகவரி, அலைபேசி எண் கிடைத்ததால் பேசுகிறேன் என்றும், என்னுடன் ஒரு இரவு முழுவதும் தங்கி மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறி அதற்காக எவ்வளவு கட்டணம் கேட்டாலும் தருகிறேன் என்று கூறி ஆபாசமாக பேசி அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து, அலிஷா அப்துல்லா தனது நண்பர்களுடன் ஓ.எம்.ஆர். சாலையில் ஏகாட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் அந்த ஓட்டலுக்கு சென்று, அந்த நபரை கண்டுபிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கும், கூடுதல் ஆணையர் சுதாகருக்கும் தகவல் தெரிவித்து இந்த சம்பவங்கள் குறித்த வீடியோ ஒன்றையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு. அதில் கூடுதல் ஆணையர் சுதாகரை டேக் செய்துள்ளார்.

அதன்படி, சென்னை மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பிடித்தபோது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், மதுபோதையில் பாஜ பெண் பிரமுகரை செல்போனில் தொடர்புகொண்டு, மசாஜ் செய்ய அழைத்து தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போனில் தொடர்புகொண்டு மசாஜ் செய்ய அழைத்து பாஜ பெண் பிரமுகருக்கு தொல்லை: வாலிபருக்கு தர்ம அடி, நீலாங்கரை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : BJP ,Neelangarai ,Tiruppurur ,Neelangara ,Alisha Abdullah ,Balawagak, Chennai ,Bajaj ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...