×

காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் இருந்து தரவேண்டிய நீர் விவகாரம், நீர்த் திறப்பு தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாத பங்காக 40 டிஎம்சி தண்ணிரை விடுவிக்க உத்தரவிட வேண்டும். மேலும் ஜூன் மாதம் 9.19 டிஎம்சி, ஜூலை மாதம் 31.24 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி கர்நாடகம் திறக்க வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு 40 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும் என டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும். ஜூலை மாதத்துக்கான 31.24 டி.எம்.சி. தண்ணீரையும் திறக்க வேண்டும் என்றும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kaviri ,Tamil Nadu ,Caviar Management Commission ,Delhi ,Karnataka State Public Works ,Dinakaran ,
× RELATED சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 95.02% நீர் இருப்பு உள்ளது