×

தனியார் மூலம் ஓட்டுநரை நியமிக்கும் டெண்டர் ரத்து: ஐகோர்ட்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்கும் டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பது ஊதிய முரண்பாட்டுக்கு வழிவகுக்கும். கடந்த செப்டம்பரில் வெளியிட்ட டெண்டரை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் போக்குவரத்துக் கழகத்தின் முடிவு அபாயகரமான சோதனை என ஐகோர்ட் நீதிபதி ஆர்.ஹேமலதா கருத்து தெரிவித்துள்ளார்.

The post தனியார் மூலம் ஓட்டுநரை நியமிக்கும் டெண்டர் ரத்து: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Chennai Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...