×

பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து பயணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு: மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் சென்னை நகர கூட்டாண்மை – நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் கீழ், பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து பயணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய வருடாந்திர ஆய்வுகள் 4 ஆண்டுகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வின் மூலம் பயணிகளின் தேவைகளை தெரிந்து, சேவை தரத்தை உயர்த்துவதற்கான புதிய முயற்சிகளை திட்டமிட உதவியாக இருக்கும். ஐபிஎஸ்ஒஎஸ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட், என்ற ஒரு முன்னணி சந்தை ஆய்வு நிறுவனம், சென்னை நகரப் பகுதியில், இந்த வருடாந்திர ஆய்வுகளைச் செய்ய நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 2310 கருத்துகளை சேகரிக்கவுள்ளது, இதில், சென்னை மாநகராட்சி எல்லைகளுக்குள் 1155 கருத்துகளும் மற்றும் மாநகர எல்லைகளுக்கு வெளியே உள்ள பகுதிகளில் இருந்து 1155 கருத்துகளும் பெறப்படும்.

இந்த ஆய்வுகள் கீழ்க்கண்ட அளவுகோல்களின் அடிப்படையில் நடத்தப்படும்:
* பயணிகளின் பயணப் பண்புகள் – பயண நோக்கம், தூரம், பயண நேரம், பேருந்து நிறுத்த அணுகல்.
* மா.போ.கழகப் பேருந்து பயணத்தின் அனுபவம் மற்றும் திருப்தி – பேருந்தின் தொடர் சேவை, கட்டணங்கள், தகவல், செயல்பாட்டு செயல்திறன், சவால்கள், அணுகல் வசதி, சேவை தரம், பாதுகாப்பு மற்றும் சேவை மேம்பாட்டு ஆலோசனைகள்.
* சென்னை பஸ் செயலி மற்றும் பிற ஆன்லைன் செயலி – அணுகல் மற்றும் பயன்பாடுகள்.
* பயணிகளின் விவரங்கள் – பாலினம், பகுதி, கல்வி, வருவாய் மற்றும் பிற தகவல்கள். இந்த ஆய்வின் முடிவுகள் மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்து சேவை மேம்பாடுகளை துரிதப்படுத்தும் ஊக்கமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, மா.போ.கழகப் பேருந்து சேவைகளை இந்தியாவின் முன்மாதிரியான நகர பேருந்து சேவை அமைப்பாக மாற்றும் இலக்கை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து பயணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு: மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation Information ,CHENNAI ,Municipal Transport Corporation ,Managing Director ,Alby John Varghese ,Chennai City Partnership ,Government of Tamil Nadu ,World Bank ,Asian Infrastructure Investment Bank… ,Dinakaran ,
× RELATED வரும் 21ம் தேதி முதல் மூத்த...