×

நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் பயணிகளை காப்பாற்றிய மாநகர பேருந்து டிரைவர்: மருத்துவமனையில் உயிரிழந்தார்

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் தர் (45). இவர், பூந்தமல்லி மாநகர பேருந்து பணிமனையில் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் நேற்று பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை மாநகர பேருந்தில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மாநகர பேருந்தை டிரைவர் தர் ஓட்டிவந்துள்ளார். பணியின்போது தருக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் நெஞ்சு வலியை பொறுத்துக் கொண்டு, மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, சீட்டில் அமர்ந்தபடியே மயங்கி விழுந்துள்ளார்.

சீட்டிலேயே மயங்கி விழுந்த டிரைவர் தரை கண்டக்டர் மற்றும் சக பயணிகள் மீட்டு, பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் தருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு டிரைவர் தர் பரிதாபமாக பலியானார். எனினும், அவர் பணியின்போது நெஞ்சுவலியால் அவதிப்பட்டும், மாநகர பேருந்தை பத்திரமாக சாலையோரத்தில் நிறுத்தி, 20க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

The post நெஞ்சுவலி ஏற்பட்டபோதும் பயணிகளை காப்பாற்றிய மாநகர பேருந்து டிரைவர்: மருத்துவமனையில் உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kadambatur ,Tiruvallur district ,Poontamalli Municipal Bus Workshop ,Poontamalli ,Chungwarchatram ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து...