×

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் முன்னேற்றம் குறித்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை: தமிழகத்தில் உள்ள மொத்த 1281 தரைப்பாலங்கள் 2026க்குள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கேற்ப தற்போது நடைபெற்று வரும் பாலப்பணிகளின் முன்னேற்றம் குறித்த இன்று(6.5.2025) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மண்டல ஆய்வு கூட்டங்களில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பாலப்பணிகள் விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

பொதுப்ணித் துறை அமைச்சர் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கினார்கள்.
*2026ம் ஆண்டுக்குள் அனைத்து தரைப் பாலங்களும் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட வேண்டும் என்ற நோக்கில் பாலங்கள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
*பாலப் பணிகள் கட்டுமானத்திற்கு முந்தைய பணிகளான மின் கம்பங்கள் இடம் மாற்றம். குடிநீர் குழாய்கள் இடம் மாற்றம், மரங்களை அகற்றுதல், நில எடுப்பு பணிகள் போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
*விரிவான கள ஆய்வுக்கு பின் மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். மதிப்பீடு தயார் செய்யும்பொழுது, கள ஆய்வுகள், ஆற்றின் நீரியியல் விபரங்கள். மண் பரிசோதனைகள் போன்றவற்றை கவனம் செலுத்தினால் செயல்பாட்டின் போது கால தாமதத்தை தவிர்க்கலாம் எனவும், பொதுவாக பாலப்பணிகள் மேற்கொள்ள மழை காலங்கள் இல்லாத போது அடித்தளம் அமைக்கும் பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். *பாலப்பணிகள் முக்கியம் கருதி பொறியாளர்கள், ஒவ்வொரு நிலையிலும் என ஆய்வு மேற்கொண்டு தரத்தினை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

பணிகள் பற்றிய விபரம்
தற்போது, தமிழ்நாட்டில், நபார்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 276 பாலப்பபணிகள் ரூ.1586 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. தற்போது 40 இரயில்வே மேம்பாலங்கள், இரயில்வே நிட்டப்பணிகளின் கீழ் ரூ3.456 நோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் -அவிநாசி சாலையில் 10 கி.மீட்டர் நீளத்திற்கு ரூ1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்கள்.

சென்னை பெருநகர பகுதியில் 2 ஆற்றுப்பாலங்கள், 2 சாலை மேம்பாலங்கள் மற்றும் 3 இரயில்வே பாலங்கள் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை – கன்னியாகுமரி தொழிற்தட மேம்பாட்டுத் திட்டத்தில் 23 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை தவிர, ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, 740 பால சாலை 1017 உட்கட்டமைப்பு பாலப்பணிகள் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 277 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தேசிய நெடுஞ்சாலை அலகில் 4 ஆற்றுப்பாலங்கள், 8 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 9 சாலை மேம்பால பணிகள் ரூ.1,174 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள், குறித்த காலத்தில் முடித்திடவும், ஒப்பந்த காலத்தை கடந்தும் பணிகள் முடிக்காத ஒப்பந்தாரர்களுக்கு கால தாமத்திற்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்புமாறும், பிற பணிகள் அனைத்தும் ஒப்பந்த காலத்திற்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், இ.ஆ.ப., சாந்தி, முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகர், பாலமுருகன், முருகேசன், இளங்கோ, கீதா ஆகியோர் மற்றும் அனைத்து கண்காணிப்பு செல்வம் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாலப்பணிகள் முன்னேற்றம் குறித்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Highway Research Station Campus Minister ,AICC ,Tamil Nadu ,Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,
× RELATED கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா