×
Saravana Stores

மூளைச்சாவு அடைந்த ஆந்திராவை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

வேலூர் : வீட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் பதூலா சாமுவேல் சம்பத்குமார்(39). திருமணமாகாதவர். வியாபாரி. இவர் கடந்த 21ம் தேதி மதியம் 12.30 மணியளவில் தனது வீட்டின் குளியலறையில் தவறி விழுந்தார். இதில் தலையில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் மறுநாள் 22ம் தேதி காலை 11.15 மணியளவில் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 1.50 மணியளவில் பதூலா சாமுவேல் சம்பத்குமார் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது பெற்றோர் பதூலா அகஸ்டின், சாது சத்தியகுமாரி ஆகியோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர்.

இதையடுத்து பதூலா சாமுவேல் சம்பத்குமாரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இவ்வாறு தானமாக பெறப்பட்ட இருதய வால்வுகள் சென்னை எம்எம் மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், இடது பக்க சிறுநீரகம் சிஎம்சி ராணிப்பேட்டை வளாகத்துக்கும், வலது பக்க சிறுநீரகம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.

The post மூளைச்சாவு அடைந்த ஆந்திராவை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Patula Samuel Sampathkumar ,Guntur, Andhra Pradesh ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...