×

சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் போக்சோவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதுார் அருகே சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே மேவளூர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர், தினமும் மொட்டை மாடியில் நின்று கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டி வந்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வாலிபரிடம் சிறுமியின் பெற்றோர் தட்டி கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு தவறான சைகை காட்டிய வாலிபரை, போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

The post சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Bokso ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அரசு...