×

என் தாத்தாவின் சித்தாந்தத்தில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை: மாஜி முதல்வரின் மகன் ஆவேசம்

ஐதராபாத்: என் தாத்தாவின் சித்தாந்தத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் எனது தாத்தாவால் கட்டமைக்கப்பட்ட கட்சியை உடைக்க முயற்சித்திருக்க மாட்டார்கள் என்று ஆதித்ய தாக்கரே கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்ய தாக்கரே பேசுகையில், ‘மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி கட்சிகள், மாநிலத்தில் கலவரங்களைத் தூண்டுகின்றன. எங்களின் இந்துத்துவா தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்துத்துவாவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று கூறுவது பாஜகவின் இந்துத்துவா என்றால், அதனை என் தந்தை, என் தாத்தா (பால் தாக்கரே), எங்கள் மக்கள் ஏற்கமாட்டார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது ஒன்றிய பாஜக அரசால் அல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடக்கிறது. என் தாத்தாவின் சித்தாந்தத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அவர்கள் எனது தாத்தாவால் கட்டமைக்கப்பட்ட கட்சியை உடைக்க முயற்சித்திருக்க மாட்டார்கள்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவால் எங்களுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை. பாஜகவுடன் எங்களுக்கு எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை’ என்றார். இந்த நிகழ்ச்சியில் சிவசேனா ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் உடன் இருந்தார். முன்னதாக, தெலங்கானா மாநில அமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்ஏவுமான கே.டி.ராமராவை, குறிப்பிட்ட டி-ஹப்பில் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post என் தாத்தாவின் சித்தாந்தத்தில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை: மாஜி முதல்வரின் மகன் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BJP ,CM ,Hyderabad ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு