×

பிஸ்கர் ஓசன் எலக்ட்ரிக் எஸ்யுவி

கலிபோர்னியாவை சேர்ந்த பிஸ்கர் நிறுவனம், ஓசன் என்ற எலக்ட்ரிக் எஸ்யுவியை இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எக்ஸ்ட்ரீம் விகான் லிமிடெட் எடிஷனாக 100 கார்கள் மட்டும் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 114 கிலோவாட் அவர் பேட்டரி மற்றும் டூயல் எலக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இந்த மோட்டார்கள் அதிகபட்சமாக 572 எச்பி பவரையும், 737 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கி.மீ வேகத்தை 4 நொடிகளில் எட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ தூரம் வரை செல்லலாம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

சோலார் பேனல் கூரை, 17.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. தற்போது ஜெர்மனில் விற்கப்படும் விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியச் சந்தையில் இதன் விலை சுமார் ரூ.64.5 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்டால், இது ஆடி இ-டிரான், ஜாகுவார் ஐ-பேஸ், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post பிஸ்கர் ஓசன் எலக்ட்ரிக் எஸ்யுவி appeared first on Dinakaran.

Tags : Biscar Ozone Electric ,California ,Biscar ,Ozan ,Dinakaran ,
× RELATED புதிய AR கண் கண்ணாடியை அறிமுகம் செய்த...