×

பீகார் அரசின் 65 சதவீத இட ஒதுக்கீடு சட்ட வழக்கு; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: பீகார் அரசின் இட ஒதுக்கீடு சட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் இதர பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டதுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் சேர்த்து அந்த மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 75 சதவீதமாக மாற்றப்பட்டது. பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பீகார் அரசின் அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ‘இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற தீர்ப்பை பீகார் அரசு மீறியுள்ளது’ என்று ெதரிவிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்திய பீகார் அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் பீகார் மாநில அரசு, உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடைவிதிக்கவும், நோட்டீஸ் பிறப்பிக்கவும் முடியாது என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை அமர்வு மறுப்பு தெரிவித்தது. அதேபோல வழக்கை பட்டியிடப்படும் தேதியையும் தெரிவிக்க முடியாது என நீதிபதி தெரிவித்து உத்தரவிட்டனர்.

 

The post பீகார் அரசின் 65 சதவீத இட ஒதுக்கீடு சட்ட வழக்கு; பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna Aycourt ,Supreme Court ,New Delhi ,iCourt ,Bihar government ,Dinakaran ,
× RELATED நிலத்தகராறில் பயங்கரம்: பீகாரில் 21...