×

குமாரசாமிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு: எடியூரப்பாவிடம் லோக்ஆயுக்தா விசாரணை

பெங்களூரு: குமாரசாமிக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் லோக்ஆயுக்தா போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பெங்களூரு வளர்ச்சி ஆணையம் 1976ம் ஆண்டு லே அவுட் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தியது. அந்த நிலத்தில் 1.11 ஏக்கர் நிலம் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது 2010ம் ஆண்டு குமாரசாமியின் மைத்துனர் சென்னப்பா பெயரில் மாற்றப்பட்டது.

எடியூரப்பா முதல்வராக இருந்தபோது பெங்களூரு கங்கேனஹள்ளி லே அவுட்டில் 1.11 ஏக்கர் நிலம் குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டது குறித்து லோக்ஆயுக்தா விசாரணை நடத்திவரும் நிலையில், இதுவரை அந்த வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. தற்போது இந்த வழக்கு விசாரணையை லோக்ஆயுக்தா முடுக்கிவிட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு எடியூரப்பாவிற்கு லோக்ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், அதன்படி நேற்று லோக்ஆயுக்தா முன் விசாரணைக்கு எடியூரப்பா நேரில் ஆஜரானார். அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது.

The post குமாரசாமிக்கு நிலம் ஒதுக்கிய வழக்கு: எடியூரப்பாவிடம் லோக்ஆயுக்தா விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kumarasamy ,Lokayukta ,Edyurappa ,Bangalore ,Chief Minister ,Ediuropa ,Bengaluru Development Commission ,Ediurappa ,Dinakaran ,
× RELATED ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு