×

கிரீன் டீ தரும் நன்மைகள்!

நன்றி குங்குமம் தோழி

இன்று உலகம் முழுவதும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ ஆகத்தான் இருக்கும். இன்று ஏராளமானோர் பால், டீ குடிப்பதை விட, கிரீன் டீயைத்தான் அன்றாடம் பருகி வருகின்றனர். பலருக்கு கிரீன் டீ குடித்தால், உடலுக்கு நல்லது என்பது தெரியும். கிரீன் டீ குடிப்பதால் பல முக்கியமான நன்மைகள் உண்டு.

* கிரீன் டீயில் நோய் எதிர்ப்பு சக்திஅதிகம். காய்கறிகள் கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து உள்ளது.

* ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் பழச்சாறுக்குச் சமம்.

* கிரீன் டீ நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து, வாழ்நாட்களை நீடிக்கச் செய்கின்றன. ஆகவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

* கிரீன் டீ ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.

* ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுப் பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

* மூட்டுவலியை தடுக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

இவ்வளவு நன்மைகள் உள்ள கிரீன் டீயை அருந்தி நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

– மகாலெட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

The post கிரீன் டீ தரும் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : kumkum Doshi ,
× RELATED கேஸ் விலை உயர்வு… சிக்கனத்துக்கு சில வழிகள்!