×

ஆட்டோ மோதி தொழிலாளி சாவு

பூந்தமல்லி: திருவேற்காட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றபோது ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலியானார்.  சென்னை திருவிக நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (50), கூலி தொழிலாளி. இவர் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு சன்னதி தெருவில் பாஸ்கர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவரது உறவினர்கள் அவரிடம் வந்து கேட்டபோது தனக்கு ஒன்றும் இல்லை என தெரிவித்துவிட்டு மண்டபத்தில் படுத்திருந்தார். இதனையடுத்து அவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆட்டோ மோதி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Poonthamalli ,Thiruvechat ,Bhaskar ,Chennai ,
× RELATED ஹாங்காங்கிற்கு பெரிய ரக விமானம்...