×

ஆக. 25ல் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்..!!

சென்னை: ஆக. 25ம் தேதி சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெறவுள்ளது. மேற்கண்ட முகாம் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 5.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். இதில் பங்கு பெற விரும்பும் தொழில் முனைவோர் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் https://forms.gle/DmcYKNEsMTk2gyBb7 ஆன்லைன் முன்பதிவு செய்யவும். அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு:

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: 7418304939

The post ஆக. 25ல் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம்..!! appeared first on Dinakaran.

Tags : Entrepreneurship Awareness Camp ,Chennai ,Entrepreneurship ,Development ,Innovation ,Institute ,Chennai Entrepreneurship Development and Innovation Institute ,Entrepreneurship Development and Innovation Institute Complex ,Dinakaran ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...