×

அட்டாரி-வாகா எல்லையில் இன்று முதல் மீண்டும் கொடியிறக்கும் நிகழ்வு

பஞ்சாப்: பஞ்சாபில் உள்ள இந்தியா, பாக். எல்லையான அட்டாரி வாகா எல்லையில் இன்று முதல் மீண்டும் கொடியிறக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால், இந்தியா-பாக். உறவில் -மோதல் ஏற்பட்டதால், மே 8ம் தேதி முதல் கொடியிறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அட்டாரி – வாகா எல்லையில், 12 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கோலாகலமாக நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அட்டாரி – வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வை -பார்ப்பதற்கு நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயான அட்டாரி, வாகா எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாள்தோறும் மாலையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந் நிலையில், இன்று முதல் தினமும், அட்டாரி,வாகா எல்லை கொடியிறக்க நிகழ்வு நடைபெறும்.

12 நாட்கள் கழித்து, பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அட்டாரி, வாகா எல்லையிலும், பெரோஸ்பூரில் உள்ள ஹூசைனிவாலா எல்லையிலும் இன்று முதல் மீண்டும் தொடங்கும். இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் வாயில்கள் மூடப்பட்டு இருக்கும். நிகழ்வின் போது பங்கேற்பாளர்கள் கைகுலுக்க மாட்டார்கள்.

1959ம் ஆண்டு முதல் எல்லையில் நடத்தப்பட்டு வந்த கொடியிறக்க நிகழ்வு, மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் மே 8ல் இருந்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 12 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அட்டாரி-வாகா எல்லையில் இன்று முதல் மீண்டும் கொடியிறக்கும் நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Flag-lowering ceremony ,Attari-Wagah border ,Punjab ,India-Pakistan border ,Pahalgam terror attack ,India ,Pakistan ,Dinakaran ,
× RELATED திரைப்படத்தை பற்றி அவதூறு கருத்து...