×

அசாம் மாநில காங். தலைவராக கவுரவ் கோகாய் நியமனம்

புதுடெல்லி: அசாமில் காங்கிரஸ் மாநில தலைவராக கவுரவ் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அசாம் மாநில காங்கிரஸ் தலைவரான பூபன் குமார் போராவுக்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை எம்பியான கவுரவ் கோகாய் அசாம் மாநில புதிய தலைவராகியுள்ளார்.

இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அசாம் மாநிலத்திற்கான புதிய தலைவராக கவுரவ் கோகாயை கட்சியின் தலைவர் நியமித்துள்ளார். மேலும் ஜாகிர் உசேன் சிக்தார், ரோஸ்லினா டிர்கி மற்றும் பிரதீப் சர்க்கார் ஆகிய மூன்று பேரும் புதிய செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது நியமனம் உடனடியாக அமலுக்கு வருகின்றது. ஏற்கனவே தலைவராக இருந்த பூபன் குமாரின் பங்களிப்புக்கு கட்சி பாராட்டுக்களை தெரிவிக்கின்றது.

The post அசாம் மாநில காங். தலைவராக கவுரவ் கோகாய் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Assam State Congress ,Gaurav Gogoi ,New Delhi ,Congress ,Assam ,president ,Bhupan Kumar Bora ,Lok Sabha ,MP… ,Dinakaran ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...