×

ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி

மியூயாங்: தாய்லாந்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி தாய்லாந்தின் மியூயாங் மாவட்டத்தில் நடக்கிறது. 5வது நாளான நேற்று பல்வேறு பிரிவுகளில் காலிறுதி, அரையிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

மகளிர் ஒற்றையர் பிரிவு (எஸ்டி1) அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில் ஆடிய தமிழ்நாட்டு வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ், துளசிமதி முருகேசன் ஆகியோர் மோதினர். இதில் சிறப்பாக ஆடிய மனிஷா, 12- 21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை நித்ய சுமதி சிவன், தாய்லாந்து வீராங்கனை செயாங் சாய் களம் கண்டனர். அதில் நித்ய 21-15, 21-16 என நேர் செட்களில் வென்று இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார். போட்டியின் கடைசி நாளான இன்று இறுதி போட்டிகள் நடைபெறும்.

The post ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன்: தமிழக வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Asian Para Championship Badminton ,Tamil Nuggets ,Mueang ,Asian Para Championship ,Thailand ,Mueang District, Thailand ,India ,Women's Singles Division ,S1 ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!