×

ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரனதிக்கு வெண்கலம்

ஜேசியான்: தென் கொரியாவில் பெண்களுக்கான ஆர்ட்டிஸ்ட் ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. வால்ட் பிரிவில் இந்தியாவின் பிரனதி நாயக்(30) பங்கேற்றார். பைனலில் 13.466 புள்ளி பெற்ற பிரனதி, 3 இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் ஜங் இஹான் (13.650), வியட்நாமின் நிகுயேன் தி (13.583) முறையே தங்கம், வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை புரோதிஸ்தா சமந்தா, 13.016 புள்ளி எடுத்து 4வது இடம் பிடித்தார்.

ஆர்ட்டிஸ்ட் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பிரனதி வென்ற 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 2019ல் உல்லன்பட்டர், 2022ல் தோஹா போட்டியில் பிரனதி இரண்டு வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஆசிய சாம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரனதிக்கு வெண்கலம் appeared first on Dinakaran.

Tags : CHAMPIONSHIP GYMNASTICS REPRESENTATIVE ,Jasian ,Artistic Asian Championship Gymnastics Competition for Women ,South Korea ,India ,Nayak ,Pranati ,Jung Ihan ,China ,Asian Championship Gymnastics ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!