×

சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் ஒவ்வொரு அணியும் 4 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இந்தியா (10புள்ளி) மலேசியா (9) ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. சீனா (1) வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் தென் கொரியா (5), முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (5), ஜப்பான் (2) ஆகிய 3 அணிகள் எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் உள்ளன.

இந்திய அணி ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டதால் நெருக்கடி இல்லாமல் விளையாடும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுடன் ‘டிரா’ செய்தாலே அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும்.

The post சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India-Pakistan Championships Hockey tournament ,Chennai ,Chief Minister of India ,G.K. Stalin ,Chief Minister ,Mukheri ,India-Pakistan Championships Hockey ,INDIA ,Pakistan ,Asian Championship Hockey tournament ,
× RELATED பொங்கல் பண்டிகை: அதிகக் கட்டணம்...