×

ஒரே நேரத்தில் 130 கலைஞர்கள் அரங்கேற்றிய ஒயில் கும்மி: அழிந்து வரும் கலைக்கு உயிர் கொடுக்கும் கிராம மக்களுக்கு பாராட்டு..!!

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒயில் கும்மி ஆட்டத்தை அரங்கேற்றி அசத்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை சேர்ந்த பெண்கள் சேர்ந்து தங்கள் கிராமத்தில் ஒயில்கும்மி கலை குழு ஒன்றை தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு தொண்டபாடி கிராமத்தை சேர்ந்த நல்லமாணிக்கம் என்ற பட்டதாரி இளைஞர் 30க்கும் மேற்பட்ட செவி வழி கும்மி பாடல்களை சேகரித்து அதன் மூலம் பயிற்சியளித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக முறையாக பயின்று தேர்ச்சி பெற்ற 130 கலைஞர்களின் ஒயில் கும்மி அரங்கேற்றப்பட்டது.

வேப்பந்தட்டை நெய் குப்பை சாலையில் உள்ள பெருமாள்கோயிலில் ஒரு புறம் மாலை 6 மணிக்கு தொடங்கிய ஒயில் கும்மி இரவு 11 மணி வரை நீடித்தது. அழிந்துவரும் கலைகளில் ஒன்றான ஒயில்கும்மிக்கு மீண்டும் புத்துயிர் அளித்துவரும் வேப்பந்தட்டை கிராம கலைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post ஒரே நேரத்தில் 130 கலைஞர்கள் அரங்கேற்றிய ஒயில் கும்மி: அழிந்து வரும் கலைக்கு உயிர் கொடுக்கும் கிராம மக்களுக்கு பாராட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur… ,Gummi ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...