- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- சாகித்திய அகாடமி
- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
- கலைவனார் அரங்கம்
- சென்னை…

சென்னை: ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முக திறன் கொண்டவர் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சாகித்ய அகாடமி, ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கருத்தரங்கு இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கலைஞர் குறித்த சிறப்பு மலரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்;
கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்:
ஒரு தலைப்புக்குள் சுருக்கிட முடியாத பன்முக திறன் கொண்டவர் கலைஞர். கலைஞர் நடத்தியுள்ள விவாதங்கள் அழகான, ஆழமான கருத்து மோதல்கள். தனது வாழ்நாளில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்த மாபெரும் தலைவர் கலைஞர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். தொட்ட துறைகள் அனைத்திலும் கோலோச்சியவர்தான் கலைஞர்.
நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் திட்டங்கள் நிறைவேற்றம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 15 தமிழ் அறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு வழங்கி உள்ளது. எழுத்தாளரை போற்றும் சமூகம்தான் உயர்ந்த சமூகமாக இருக்கும். கலைஞரின் அனைத்து படைப்புகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 பேருக்கு தலா ரூ.1 கோடியில் வீடுகள் வழங்கப்பட்டது. படைப்பாளிகளை அவர் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும் என என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர்.. படைப்பாளிகளை அவர் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!! appeared first on Dinakaran.
