×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா

*புதுகை கலெக்டர் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை : கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை கலெக்டர் மெர்சி ரம்யா துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை நகராட்சி, தஞ்சாவூர் சாலை, சிட்கோ எதிரில், கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், மரக்கன்றுகளை, கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று நட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது;கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, தமிழ்நாடு முதலமைச்சர் 7ம்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா இன்றையதினம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், புளி, நாவல், அரசு, ஆல், புங்கன், பாதாம், இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரங்களுடன் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இந்நிகழ்வில் திருச்சி நெடுஞ்சாலைத்துறை துறை அதிகாரிகள் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Pudukottai Collector ,Pudukottai district ,
× RELATED கீரனூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது