×

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மடிக்கணினியில் இருந்து 75 நபர்களின் பெயர் பட்டியல் சிக்கியது: தமிழ்நாடு அரசு

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரி மடிக்கணினியில் இருந்து லஞ்ச வழக்கில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் அடங்கிய விவரம் சிக்கி உள்ளது என தமிழ்நாடு அரா தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

அங்கீத் திவாரியை வாக்கு மூலத்தில் மேலும் சில அதிகாரிக்கு தொடர்பு உள்ளது என தெரிவித்துள்ளார் எனவே தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

2 தரப்பு வாதங்களை முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் என்ற போர்வையில் உரிய அனுமதியின்றி மிகவும் ரகசியமான ஆவணங்களை திருடிய 35 நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது வரை அமலாக்கத்துறை புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாறாக எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அமலாக்கத் துறையினர் தமிழக டிஜிபிக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் கடந்த 2ம் தேதி அனுப்பிய புகார் கடிதத்தில் தெரிவித்தது போன்று சம்பந்தப்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு டிஜிபிக்கு நினைவூட்டலாக 2வது கடிதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மடிக்கணினியில் இருந்து 75 நபர்களின் பெயர் பட்டியல் சிக்கியது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Ankeet Tiwari ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...