×

அரபிக் கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை : தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் மாலையில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடகிழக்கு திசையில் நகர தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு பிபோர்ஜோய் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் மாநிலம் பிபோர்ஜோய் என்ற பெயரை வழங்கியது. பிபோர்ஜோய் என்றால் பேராபத்து என்பது பொருளாகும்.

அரபிக் கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜோய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 6 மணிநேரத்தில் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக கேரளா முதல் மராட்டியம் வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில் அரபிக்கடலில் உருவாகி உள்ள புயலால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலத்தின் உட் பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரித்துள்ள வானிலை மையம், பெரும்பாலான இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு 2 முதல் 4 செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் நடப்பு மாதத்தில் 2வது முறையாக 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெயில்; 200 ஆண்டுகளில் 7வது முறையாக 108 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அரபிக் கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Arabian Sea ,Tamil Nadu ,India ,Department ,Chennai ,southeast Arabian Sea ,wave ,India Meteorological Department ,Dinakaran ,
× RELATED தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய...