×

தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவில் 6 நாட்கள் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக கோடை மழை தீவிரமாக பெய்தது. இந்நிலையில் கடந்த மே 30ம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் கடந்த இரு தினங்களாக கேரளாவில் மழையின் தீவிரம் குறைந்தது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடலில் கேரளாவை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் அடுத்த 6 நாட்களுக்கு கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழையுடன் இடி, மின்னலும் இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாளை வரை கேரள கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

The post தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை கேரளாவில் 6 நாட்கள் பலத்த மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southeast Arabian Sea ,Kerala ,Meteorological Department ,Thiruvananthapuram ,South East ,South East Arabian Sea ,
× RELATED வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 18 வரை...