×
Saravana Stores

அன்னூர் சார் பதிவாளர் ஆபீசில் விடியவிடிய ரெய்டு

அன்னூர்: கோவை மாவட்டம்‌, அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூர் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ்ச பெற்று கொண்டுதான் பணி செய்வதாக வந்த புகாரில்ன்பேரி, நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு அலுவலகத்துக்குள் புகுந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் கைப்பற்றப்பட்டது. நேற்று காலை 10 மணி வரை சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்த்தனர். பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். சார் பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள இ சேவை மையத்திலும் சோதனை நடந்தது. அப்போது ஒருவர் வைத்திருந்த ரூ.49 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், உரிய ஆவணங்கள் காட்டிய பின் ஒப்படைத்தனர்.

The post அன்னூர் சார் பதிவாளர் ஆபீசில் விடியவிடிய ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Annoor ,Sir ,Registrar ,Annur ,Nagammaputur ,Annur, Coimbatore district ,
× RELATED அன்னூர் தாலுகா அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு