×

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி ஆட்சி நடத்திய லட்சணத்தை நாடறியும் : கனிமொழி எம்பி காட்டமான அறிக்கை

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளதாக சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. ஜூன் 2ம் தேதி தண்டனை விவரங்களை அளிப்பதாக நீதிபதி அறிவித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு 15 நாட்களுக்கு முன்பு தான், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கோடு அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடைபெற்றாலும், 2019ம் ஆண்டுதான் வெளிச்சத்துக்கு வந்தது.அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பைப் தீர்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறோம். பொள்ளாச்சி பாலியல் வழக்கை அவர் ஆட்சி நடத்திய லட்சணத்தை இந்த நாடறியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அண்ணா பல்கலை மாணவி வழக்கில் 157 நாளில் தீர்ப்பு; பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எடப்பாடி ஆட்சி நடத்திய லட்சணத்தை நாடறியும் : கனிமொழி எம்பி காட்டமான அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna University ,Kanimozhi ,Chennai ,DMK ,Deputy General Secretary ,Parliamentary Group Leader ,Kanimozhi MP ,Gnanasekaran ,Chennai Women's… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்