×

அண்ணாமலை எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அண்ணாமலை எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெருவில், அறநிலைய துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் முத்துக்குமாரசுவாமி கோயில் சார்பில் அமையவிருக்கும் மருத்துவ மையத்தை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது: 2022-2023ம் ஆண்டுகளில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 கோயில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தம் 15 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. தம்பு செட்டி தெருவில் உள்ள முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை 1980ம் ஆண்டு முதல் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக 13 கடைகளுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். ரூ.10 கோடி மதிப்புள்ள இந்த இடம் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விரைவில் மருத்துவமனை அமையவுள்ளது. அண்ணாமலை, ஆளுநரிடம் 2 அல்லது 10 பைல்ஸ் கொடுத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. அண்ணாமலையின் நடைபயணம் இல்லை, இன்னும் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் புதுச்சேரி உட்பட நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும்.

* விரைவில் கிளாம்பாக்கம் பஸ் முனையம்
அமைச்சர் சேகர்பாபு மேலும் கூறியதாவது: மழைநீர் வடிகால் பணிகள், காவல் நிலையம் அமைப்பது, முக்கியமான 3 சாலைகள் போடுவது போன்ற கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பார்.

The post அண்ணாமலை எத்தனை குட்டிகரணம் அடித்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Annamalai ,Minister ,Shekharbabu ,Chennai ,Dinakaran ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...