×

ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன்

தேவையானவை:

சிக்கன் – 250 கிராம் (துண்டுகளாக நறுக்கவும்)
காய்ந்த மிளகாய் – 4
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சிக்கன் துண்டுகள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து சிக்கனை வேக விடவும். சிக்கன் மிருதுவாக வெந்த பிறகு பச்சை மிளகாய் சாஸ், நறுக்கிய கொத்த மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

The post ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ப்ளம் கேக்