தேவையான பொருட்கள் :.
கறுப்பு உளுந்து – 1 கப்
வெண்ணெய், மிளகு – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :.
கறுப்பு உளுந்தை வெறும் கடாயில் வாசனை வரும் வரையில் வறுக்க வேண்டும். அதன் பிறகு மிக்ஸியில் ரவை போன்று கரகரப்பாக பொடியாக்க வேண்டும். அதோடு கறிவேப்பிலை, துருவின இஞ்சி, மிளகுப் பொடி, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இதையடுத்து 15 நிமிடங்கள் ஊற வைத்து வடையாக தட்டி, கடாயில் சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும்.பைரவருக்கு செய்யப்படும் விசேஷமான நைவேத்தியம் தான் இந்த கறுப்பு உளுந்து வடை. இதனை உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
The post கறுப்பு உளுந்து வடை appeared first on Dinakaran.