×
Saravana Stores

எண்ணூரில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: எண்ணூரில் அமோனியா வாயு கசிவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை எண்ணூரை அடுத்த பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் என்ற உர நிறுவனத்தில் நள்ளிரவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய கிராமங்களில் கடுமையான நெடி பரவி வருகிறது. அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் ஆலையை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆய்வுக்குழு தக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கபட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வருபவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிட்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

The post எண்ணூரில் அமோனியா வாயு கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Subramanian ,Chennai ,Minister of Public Welfare ,Stanley Hospital ,Olur ,
× RELATED 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள்...