×

மணிக்கு 150 கிலோ மீட்டர் ஸ்பீட்: அமெரிக்காவில் பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் பீரால் இயங்கக்கூடிய இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மின்சார சக்தியில் இயங்கக்கூடிய வாகனங்கள் மக்கள் இடையே வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பெட்ரோலுக்கு பதிலாக பீரால் இயங்கக்கூடிய வாகனத்தை அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த மைக்கேல்சன் என்பவர் தனது ஜெராஜில் இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த பீர் வண்டியில் 14 கேலன் கொள்ளளவு கொண்ட டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. எரிவாயுவுக்கு பதிலாக இதுவே வாகனத்தை இயக்கும். மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த பைக்கை விரைவில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தவுள்ளதாக அவர் கூறினார். எரிவாயு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்கள் தான் இந்த பைக்கை உருவாக்க காரணமாக இருந்ததாக மைக்கேல் தெரிவித்துள்ளார். மைக்கேல் இதற்கு முன் ராக்கெட் சக்தியில் இயக்கும் கழிப்பறை மற்றும் ஜெட் சக்தியில் இயங்கும் காபி பாட் ஆகியவற்றையும் தயாரித்திருக்கிறார்.

The post மணிக்கு 150 கிலோ மீட்டர் ஸ்பீட்: அமெரிக்காவில் பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Biera ,United States ,Washington ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...