×

அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் ரூ.36,000 கோடி மோசடி

 

புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் வர்த்தக நிறுவனம் இந்திய பங்குச் சந்தையில் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ.36,000 கோடி மோசடி செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செபி அளித்த தகவலின்படி, கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஆப்ஷன் வர்த்தகத்தில் மட்டும் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் ரூ. 36,671 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதில், ரூ.4,843 கோடி சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளது. குறிப்பாக ஜனவரி 2023 முதல் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை வெவ்வேறான மாறுபட்ட 21 வேலை நாட்களில் நிப்டி மற்றும் பேங்க் நிப்டிகளில் ஜேன் ஸ்ட்ரீட் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. ஸ்டாக் ரிக்கிங் என்று சொல்லப்படக்கூடிய, காலையில் அதிகளவிலான பங்குகளை வாங்கி அவற்றுக்கு அதிக மதிப்பு இருப்பது போல் காட்டிவிட்டு, அடுத்த நாள் அதை விற்றுவிட்டு அதிக லாபம் பார்த்ததால், ஜேன் ஸ்ட்ரீட் சிக்கியுள்ளது.

இது ஆப்ஷனல் வர்த்தகர்களை மட்டுமின்றி மொத்த பங்குச் சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும். ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு இண்டெக்ஸ் ஆப்ஷன் மூலம் ரூ.44,358 கோடி லாபமும் பங்குகளில் ரூ.7,208 கோடி மற்றும் இண்டெக்ஸில் ரூ.191 கோடி இழப்பும், ரூ.288 கோடி பண இழப்பும் ஏற்பட்டுள்ளது. நிகர லாபமாக ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு ரூ. 36,671 கோடி கிடைத்துள்ளது.

சட்டவிரோதமாக ரூ.4,843 கோடி கிடைத்திருக்கிறது என செபி கூறியுள்ளது. இந்த மோசடிகளையடுத்து, ஜேன் ஸ்ட்ரீட் வர்த்தக நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதையும், தலையிடுவதையும் செபி தற்காலிகமாக தடை செய்துள்ளது. மேலும் நிறுவனம் சட்ட விரோதமாக ஈட்டியதாக கூறப்படும் ரூ.4,843.5 கோடியை பறிமுதல் செய்ய செபி உத்தரவிட்டுள்ளது.

The post அமெரிக்காவின் ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் இந்திய பங்கு சந்தையில் ரூ.36,000 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Jane Street Company ,United ,States ,NEW DELHI ,JANE STREET TRADING COMPANY ,SEBI ,US Jane Street Company ,Dinakaran ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு