×

பாஜ அங்கம் வகிக்காத கட்சியுடன் கூட்டணி: எஸ்டிபிஐ முடிவு

முத்துப்பேட்டை: பாஜ அங்கம் வகிக்காத கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாக எஸ்டிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று எஸ்டிபிஐ கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இஸ்லாமியர்கள் மீது தொடர்ச்சியாக, ஆர்எஸ்எஸ் தொடுத்து கொண்டிருக்கிற தாக்குதலின் ஒரு பகுதிதான் வக்பு வாரிய திருத்த சட்டம். இதை பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்த்தன. நிலைக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கொடுத்த அத்தனை திருத்தங்களும் புறக்கணிக்கப்பட்டு, ஜனநாயக விரோதமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கூட்டணி நிலைப்பாடு இன்னும் பத்து மாதங்களுக்கு மேலே இருக்கிறது.

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்தோம், பாஜவுடன் ஒரே கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்ற எஸ்டிபிஐ கட்சியின் தெளிவான நிலைப்பாட்டினால் இப்போது நாங்கள் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கிறோம். விரைவில் கட்சியின் தமிழ்மாநில தலைமை கூட்டணி பற்றி அறிவிக்கும். பாஜ அங்கம் வகிக்காத எந்த ஒரு கூட்டணி கட்சியுடனும் சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எந்த கூட்டணி இந்த சமூகத்திற்கு, இந்த நாட்டிற்கு நலம் வகிக்குமோ நிச்சயமாக அந்த கூட்டணியில் எஸ்டிபிஐ இடம் பெறும். கூட்டணி என்பது சீட்டின் எண்ணிக்கையை வைத்து இல்லை. கூட்டணியை பொறுத்துதான் சீட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ அங்கம் வகிக்காத கட்சியுடன் கூட்டணி: எஸ்டிபிஐ முடிவு appeared first on Dinakaran.

Tags : Alliance with a non ,SDBI ,Muthuppettai ,Baja ,SDBI National Executive Committee ,Tehlan Bhagavi ,SDBI Party National Executive Committee ,Muthuppetta, Thiruvarur District ,Islamists ,Dinakaran ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...