×

அதிமுக வேட்பாளர் இன்று ஆலோசனை: உதயகுமார் தகவல்

மதுரை: மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடப்பதாக மாஜி அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று கூறியதாவது: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர்களை முடிவு செய்வது தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை தயார் செய்வது குறித்து நடக்கும் இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பதை தீர்ப்பின் வாயிலாக அறிய முடிகிறது.இவ்வாறு கூறினார்.

The post அதிமுக வேட்பாளர் இன்று ஆலோசனை: உதயகுமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Udayakumar ,Madurai ,Former Minister ,Rajya Sabha ,Former ,Minister ,Election Commission ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...