நெமிலி, ஜூன் 22: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது கழிவறை கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக அப்போதைய பிடிஓ மீது விஜிலென்ஸ் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கான விசாரணை நடந்து வரும் நிலையில், ேநற்று வழக்கு தொடர்பாக விடுபட்ட ஆவணங்களை நெமிலி பிடிஓ அலுவலகத்தில் இருந்து விஜிலென்ஸ் போலீசார் ஆய்வு செய்து கைப்பற்றி சென்றனர். திடீரென விஜிலென்ஸ் போலீசார் வந்து ஆவணங்களை கொண்டு சென்ற சம்பவம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அதிமுக ஆட்சியில் நடந்த கழிவறை ஊழல் வழக்கு: ஆவணங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.
