×

நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழமை அதிகாரிகளிடம் முறையிடலாம்: தமிழ்நாடு அரசு சட்டத்தில் திருத்தம்

தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது: சீட்டு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பத்திரப்பதிவு பதிவாளரிடம் முறையீடு செய்வார்கள். அப்போது பதிவாளர் மற்றும் அவரது நியமனதாரரால் பிறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது உத்தரவால் பாதிக்கப்பட்ட நபர் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்வதற்கு சட்டம் வழிவகை செய்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்வதால் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மனுக்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்படுவதாக அரசு கருதுகிறது. இதற்காக மேல்முறையீடுகளை கீழமை அலுவலர்கள், அமைப்புகள் விசாரிக்கும் விதமாக அதிகாரத்தை பகிர்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளிப்பதற்கு 1982ம் ஆண்டு சீட்டு நிதி சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

The post நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கீழமை அதிகாரிகளிடம் முறையிடலாம்: தமிழ்நாடு அரசு சட்டத்தில் திருத்தம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. Commercial Tax and Registration ,Minister ,P. Murthy ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...