×

ரகசிய ஆவணங்கள் வழக்கு டிரம்புக்கு எதிராக மேலும் 4 குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு எதிராக மேலும் 4 குற்றச்சாட்டுக்கள் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அவர், அரசின் ரகசிய ஆவணங்களையும் எடுது்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 27ம் தேதி இந்த வழக்கில் டிரம்புக்கு எதிராக ப்ளாக் பஸ்டர் என்று அழைக்கப்படும் புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அவருக்கு எதிராக மேலும் சில குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தேர்தலுக்கான சான்றிதழை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக புதிய குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் எப்பிஐ மற்றும் நீதித்துறையிடம் தகவல்களை மறைக்கும் வகையில் மார் ஏ லகோ கிளப்பில் உள்ள பாதுகாப்பு கேமரா காட்சிகளை நீக்குவதற்கு முயற்சித்தார் என்பது உட்பட மொத்தம் 4 குற்றச்சாட்டுக்கள் குற்றப்பத்திரிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ரகசிய ஆவணங்கள் வழக்கு டிரம்புக்கு எதிராக மேலும் 4 குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Trump ,Washington ,US ,President Trump ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய...