×

மீண்டும் பாதுகாப்பு குளறுபடி நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர்

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியை சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் நாடாளுமன்ற வளாகத்தின் இணைப்பு கட்டிடம் அமைந்துள்ள இம்தியாஸ் கான் சாலை பகுதியில் இருந்து, மர்ம நபர் ஒருவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்துள்ளார். அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் பிடித்து விசாரித்ததில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த மணீஷ் என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது, அவைக்குள் நான்கு பேர் குதித்தனர். அவர்கள் புகை குண்டுகளை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மீண்டும் பாதுகாப்பு குளறுபடி நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறி குதித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,CISF ,Parliament ,Delhi ,Imtiaz Khan road ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!