×

நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு..!!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் தனுஷிடம் காட்சிகளை கேட்டிருந்தார்.

ஆனால் அதற்கு நடிகர் தனுஷ் அந்த காட்சிகளை தர மறுத்தது மட்டுமல்லாமல் ரூ10 கோடி தர வேண்டும் என்று கேட்டிருந்தார். இதை அடுத்து கடந்த 2 ஆண்டுகளாக அந்த படம் வெளிவரவில்லை என்றும் நடிகை நயன்தாரா தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தான் சினிமா பின்புலம் இல்லாமல் தனியொரு பெண்ணாக சவால்கள் நிறைந்து திரைத்துறைக்கு வந்ததாகவும்.

கடின உழைப்பாலும் நேர்மையான, அர்ப்பணிப்புடனும் நடத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆவணப்படத்தை பார்க்க தனது ரசிகர்கள், நலம் விரும்பிகள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இது போல் பணம் கேட்டிருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், மனவலி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டுமல்லாமல் புகைப்படங்களில் பாடல் பயன்படுத்துவதற்கு பல போராட்டங்களில் தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தனுஷ் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை நயன்தாராவிற்கு எதிராக ஒரு மானநஷ்டயீடு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

நயன்தாரா திருமண ஆவணப்படத்தை உரிமம் பெற்றுள்ள நெட்பிளிக்ஸ் சார்பு நிறுவனத்தின் மீதும் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனக்கு எதிராக பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் அவப்பெயர் உருவாக்கும் வகையில் தெரிவித்திருப்பதாகவும் கூறி இழப்பீடு தரவேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த வழக்கு விரைவில் நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Dhanush ,Nayanthara ,Vignesh Sivan ,Madras High Court ,Chennai ,Chennai High Court ,Naam Rowdithan ,
× RELATED விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்க கூடாது: நயன்தாரா வேதனை