×

விபத்து காரணமாக கனரக வாகனங்களை 100 நாள் சிறை பிடிக்கும் உத்தரவு ரத்து: முதல்வருக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: விபத்து ஏற்படுத்திய கனரக வாகனங்களை 100 நாட்கள் வரை சிறைபிடிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் வெளியிட்ட உத்தரவை தொடர்ந்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த 26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

கனரக வாகன உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பொருளாதார, சேவை பாதிப்புகளை மதித்து தமிழக முதல்வர் சென்னை காவல் ஆணையரகம் மூலமாக வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்து வாகனங்களை விடுவித்ததற்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருந்தொகை முதலீடுகளுடன் இயங்கும் ஆம்னி பேருந்துகள், நிதிநெருக்கடியில் தள்ளப்படாமல், வழக்கமான பயண சேவையை தொடரும் வகையில் முதல்வர் எடுத்த இந்த தீர்மானம், தமிழ்நாட்டின் சாதாரண பயணிகளுக்கும், ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பலர் வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பாக அமைகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post விபத்து காரணமாக கனரக வாகனங்களை 100 நாள் சிறை பிடிக்கும் உத்தரவு ரத்து: முதல்வருக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Omni Bus Owners Association ,Chief Minister ,Chennai ,All Omni Bus Owners Association ,Police Commissioner ,All Omni Bus Owners Association… ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்