×

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்: சமூக ஊடகங்களில் பரவும் புரளிகளுக்கு மோகினி மறுப்பு

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் தொடர்புபடுத்தி வெளியாகிவரும் புரளிகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பெண் கிட்டார் இசைக்கலைஞர் மோகினி டே ரஹ்மான் தனக்கு ஒரு தந்தையை போன்றவர் என்று விளக்கம் அளித்துள்ளார். நவம்பர் 19ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு சார்பில் அவரது வழக்கறிஞர்கள் அறிவித்தனர். அதே நேரத்தில் ரகுமானுடன் பணியாற்றிய பெண் கிட்டார் இசைக்கலைஞர் மோகினி டேவும் தனது கணவர் மார்க்கனை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த இரண்டு விவகாரங்களையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மவுனம் கலைத்துள்ளார் மோகினி டே.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஒரு தந்தையை போன்றவர் என்றும் தனக்கும் ரஹ்மானின் மகள்களுக்கும் ஓரே வயது என்றும் மோகினி டே தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் 8 அரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மோகினி டே 5 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க சென்றுவிட்டதாக அறிவித்துள்ளார். இது போன்ற புரளிகள் தனிப்பட்ட ஒருவரின் மனதையும் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை அவற்றை பரப்பும் நபர்கள் உணர வேண்டும் என்று மோகினி டே தெரிவித்துள்ளார். மணமுறிவு என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் மோகினி பதிவிட்டுள்ளார்.

The post இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்: சமூக ஊடகங்களில் பரவும் புரளிகளுக்கு மோகினி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : AR Rahman ,Mohini ,CHENNAI ,Mohini Dey Rahman ,Dinakaran ,
× RELATED இசையில் இருந்து ரஹ்மான் ஓய்வா: மகள் கதீஜா பதில்