×

போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்குவதா மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகை, டிச.3: வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டில்லியில் போராடிய விவசாயிகளை தாக்கிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் தமீம்அன்சாரி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். விவசாயத்தை அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கக் கூடாது. வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டில்லியில் போராடிய விவசாயிகளை தாக்கி அடக்குமுறையில் ஈடுபட்ட மத்திய அரசை கண்டிப்பது ஆகிய கோஷங்களை எழுப்பி கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : protest ,government ,India ,
× RELATED மாதக்கணக்காக தேங்கி நிற்கும் மழைநீர்...