×

மின்சார ரயில் மோதி பெண் பலி

ஆவடி:  ஆவடி அடுத்த சேக்காடு, ஜோசப் லைன், 5வது தெருவை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுகந்தி (28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுகந்தி, நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து  பொருட்களை வாங்க கடைக்கு புறப்பட்டார்.  சுகந்தி ஆவடி அருகே இந்துக் கல்லூரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயில் மோதி தூக்கிவீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே சுகந்தி, உடல் நசுங்கி  பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் சடலத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : train collision ,
× RELATED ரயில் மோதி மூதாட்டி பலி