×

தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றம் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43 அடியாக குறைப்பு

நாகர்கோவில், டிச.3: ‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் ‘புரெவி’ புயல் எச்சரிக்கையை தொடர்ந்து  அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து எதிர்பார்க்கப்படுவதால் பொதுப்பணித்துறை சார்பில் அணைகளில் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 45 அடியை எட்டி இருந்த பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 43.95 அடியாக குறைந்தது. அணையின் உச்சநீர்மட்டம் 48 அடியாகும். அணைக்கு 496 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 526 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 69.70 அடியாக இருந்தது. அணைக்கு 176 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 350 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையின் உச்சநீர்மட்டம் 77 அடியாகும். சிற்றார்-1ல் 13.87 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சிற்றார்-2ல் 13.97 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார் அணைகளின் உச்சநீர்மட்டம் 18 அடியாகும். பொய்கையில் 19.90 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 35.10 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாம்பழத்துறையாறில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.4 அடியாகும்.

Tags : Talking Rock Dam ,
× RELATED பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறப்பு