×

மாறுபட்ட காலநிலையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்பு

ஊட்டி, டிச.3: நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயில், மழை மற்றும் மேகமூட்டமான மாறுபட்ட காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி மலை காய்கறிகளுக்கும் இதுபோன்று மாறுபட்ட காலநிலை நிலவினால் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இதனை சமாளிக்க தேயிலை விவசாயிகள் மற்றும் மழை காய்கறி விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேயிலை மற்றும் காய்கறி பாதிப்பது மட்டுமின்றி இதில் மாவட்டத்தில் உள்ள மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாறுபட்ட காலநிலையால் பொதுமக்களுக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : public ,
× RELATED பாதுகாப்பற்ற இடங்களில் வகுப்பறை மாணவர்கள் பாதிப்பு